திண்டுக்கல்: திண்டுக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி துணை வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் வக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தினார் டிப்பர் லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் கிராவல் மண்ணுடன் இருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















