சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 440/2026, பிரிவு 103(1) BNS-ன் கீழ், முலக்குளம் பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரை கொலை செய்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய மானாமதுரை, குருந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28). மற்றும் மானாமதுரை, வேலூர் பகுதியைச் சேர்ந்த ராமர் (30) ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட இருவரின் தொடர் குற்றச் செயல்களை கருத்தில் கொண்டு, அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்கள் பரிந்துரை செய்தார். அதன் பேரில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, கார்த்திக் (28). மற்றும் ராமர் (30). ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















