சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மெஜெஸ்டிக் மகாராஜா சார்பில் நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலையில் இருந்து பெரியார் சிலை வரை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி நடைபயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடையே நாட்டுப்பற்று மற்றும் தேசிய ஒற்றுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, டாக்டர் குமரேசன் மெஜெஸ்டிக் மகாராஜாவின் முகத்தில் தேசியக் கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.
சுதந்திர தினத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், “நாட்டுப்பற்று – தேசிய ஒற்றுமை – சகோதரத்துவம்” ஆகியவற்றை வலியுறுத்தும் கருத்துகள் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















