கோவை : கோவை மாநகரில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிறப்பாக காவல் பணியாற்றியதற்காக காவல்துறை பணியாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் முன்னிலையில், துணை ஆணையர் அவர்களின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் கரங்களால் இப்பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. காவல் பணியில் அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் செயல்பட்டதற்காக கிடைத்த இந்த அங்கீகாரம் பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாகவும், இது மேலும் சிறப்பாக பணியாற்றுவதற்கான ஊக்கமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்




















