கோயம்புத்தூர்: கோவை மாநகரில் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையைக் கடக்கும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அவினாசி சாலையில் பொதுமக்கள் அதிக அளவில் சாலையைக் கடக்கும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘பெலிகன் சிக்னல்’ (Pelican Signal) வசதி, நேற்று (03.07.2026) கோவை மாநகர காவல் ஆணையாளர் உயர்திரு. டாக்டர் என். கண்ணன், ஐ.பி.எஸ். அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய சிக்னல் வசதி, பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து ஒழுங்குமுறையையும் மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
நடைபெற்ற திறப்பு விழாவில், மாநகர போக்குவரத்து காவல்துறையின் உயர் அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த முயற்சியை வரவேற்றனர். பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும் இதுபோன்ற நவீன போக்குவரத்து வசதிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்




















