திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் இதில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து கடந்த மூன்று வருடங்களாக பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் இளங்கோ இந்நிலையில் தலைமை ஆசிரியர் மாற்றியிடம் செல்வதாக வந்த தகவல் பேரில் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு வேறு இடம் செல்லக்கூடாது எனவும் எங்களுக்கு ஆசிரியர் வேண்டுமென திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து மாணவர்களும் கண்ணீர் மல்க உங்களுக்கு இளங்கோ சார் வேண்டும். எங்கள நல்லா பார்த்துக் கொள்வார் , எங்களிடம் அன்பாக பேசுவார். பாடங்கள் நல்லா சொல்லிக் கொடுப்பார் , வீட்டில் வந்து கூட்டிக்கொண்டு வருவார் , என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மேலும் பெற்றோர்கள் ஆசிரியர் பணியிடம் மாற்றம் செய்தால் நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் ஆசிரியர் வந்த பின்பு பள்ளியின் மதில் சுவர் , கழிவறை, பள்ளி வண்ணங்களால் பூசப்படுதல் ,விளையாட்டுப் பொருள்கள், பள்ளியின் சீருடை , காலணிகள், மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், ஆண்டு விழா ,சுற்றுலா, குடிநீர்,மாணவர்களுக்கு போட்டிகள் என மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளதாகவும் இளங்கோ சார் வந்த பின்பு மாணவர்கள் பள்ளி கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் ஒழுக்கமாக இருப்பதாகவும்,தொடக்கத்தில் 15 மாணவர்கள் படித்த பள்ளியில். கடந்த வருடங்களில் .115 மாணவர்கள் வரை படித்ததாகவும் நாங்கள் இளங்கோ தலைமை ஆசிரியரை வெளியே அனுப்ப மாட்டோம் இதற்கு முடிவு வரும் வரை இங்கேயே காத்திருப்போம் என பள்ளியின் முன்பு காத்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பள்ளியின் மாணவர்கள் வகுப்பறையில் அழுது கொண்டிருந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் இளங்கோ அனைவரையும் சமாதானப்படுத்தினார்.




















