கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS, வழிகாட்டுதலின்படி, “ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின்” கீழ் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட்டனர். நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 காவல் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 68 இடங்களில் காவல் அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வுகளில் மொத்தம் 2,633 பொதுமக்கள் பங்கேற்றனர்.




















