- கன்னியாகுமரி: கன்னியாகுமரிமாவட்ட காவல் துறையில் நீண்டகாலம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி, இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெறவுள்ள 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 அமைச்சுப் பணியாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ்., (30.07.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்தினார். இந்த நிகழ்வில், ஓய்வுபெறவுள்ள காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல்துறையில் அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி, நினைவுப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வாழ்த்து மடல் வழங்கி கௌவுரவித்தார். மேலும், பணி ஓய்வுக்குப் பிறகும் அவர்கள் குடும்பத்தினருடன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என தனது மனமார்ந்த வாழ்த்துகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.




















