கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் முன்னெடுப்பில், பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் காலை கன்னியாகுமரி திருவள்ளுவர் நினைவு வளைவு வில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் மேலும் காவலர்கள் என பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதில் ஆண்களுக்கு– 10 கி.மீ மற்றும் பெண்களுக்கு– 5 கி.மீ தூரமும் நிர்ணயிக்கப்பட்டது இந்த மாரத்தான் ஓட்டத்தை ஆண்கள் பிரிவில்:
1.நவீன் ஷாஜி (கேரளா) 2.மரிய சரத் (சிவகாசி) 3.ஆதர்ஷ் (கன்னியாகுமரி) ஆகியோரும். அதேபோல் பெண்கள் பிரிவில்: 1.நிவேதா 2.உதய தர்ஷினி
3.பவானி ஆகியோர் முதல் மூன்று வெற்றி பெற்றனர் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















