மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்பேரில், மதுரை மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையில், மாநகரின் அனைத்து காவல் சரகங்களிலும் (04.09.2026) அன்று இரவு நேர நடைபயண ரோந்து (Foot Patrol) மேற்கொள்ளப்பட்டது. காவல் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்ற ரோந்தின்போது, காவல்துறையினர் பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களின் குறைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை கேட்டறிந்தனர். மேலும், குற்றத்தடுப்பு மற்றும் சட்டம்–ஒழுங்கு பராமரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















