மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், சோழவந்தான் காவல் நிலைய சரகம், சோழவந்தான் பெரிய கடை வீதியில் குடியிருந்து வரும் சதீஸ்கண்ணன், வயது (36). த/பெ தங்கராஜ் என்பவரது வீட்டில் இன்று (04.09.2026) அதிகாலை சுமார் 12.45 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய குற்றவாளி நாகர்ஜுன், வயது (23). த/பெ சங்கிலி, பூமேட்டுத்தெரு, சோழவந்தான், மதுரை என்பவர் கைது செய்யப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















