மதுரை: மதுரை திருநகர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த மதுமித்ரன், தனது மற்றும் மனைவியின் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார். இதற்கு பரிந்துரை செய்து ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, ஆனையூர் செந்தூர் நகரைச் சேர்ந்த யாசின் பானு (45) என்பவர் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் அடிப்படையில், பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அருகே ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை யாசின் பானு பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















