மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் மேற்பார்வையில், மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் சரகங்களிலும் காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் (01.09.2026) அன்று காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களும் இரவு நேரத்தில் நடைபயண ரோந்து (Foot Patrol) மேற்கொண்டனர். ரோந்து அலுவலின் போது, பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் குறைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை கேட்டறிந்தனர். குற்றத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















