மதுரை: மதுரை மாநகராட்சி, மண்டலம் 1, கிழக்கு மண்டல அலுவலகத்தில் சுகாதாரத்துறை மூலம், மண்டலம்–1 மற்றும் மண்டலம்–2க்குட்பட்ட பகுதிகளில் உள்ள மொத்தக் கழிவு உருவாக்குநர்களுக்கான (Bulk Waste Generators – BWGs) திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி , சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்து விளக்கி கூறினார்கள்.
மொத்தக் கழிவு உருவாக்குநர்கள் தங்களது நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை மூலத்திலேயே முறையாகப் பிரித்தல், ஈரக்கழிவு மற்றும் உலர்கழிவுகளை தனித்தனியாக கையாளுதல், உணவுக் கழிவுகளை முறையாகச் செயலாக்குதல் மற்றும் கழிவுகளை பொறுப்புடன் மேலாண்மை செய்தல் குறித்து இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், “என் கழிவு – என் பொறுப்பு” என்ற அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ஐ முழுமையாகப் பின்பற்றி, மாநகராட்சியின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மொத்தக் கழிவு உருவாக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















