தஞ்சாவூர்: எதிர்வரும் (06.09.2026) அன்று அனுசரிக்கப்பட உள்ள காவலர் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் மறைந்த காவலர்களை நினைவு கூறும் வகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து காவல்துறையில் செயல்படும் காவல்துறையின் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, போக்குவரத்து துறை, மோப்பநாய் படை பிரிவு, காவல்துறையின் செயல்பாடுகள்,
தீயணைப்பு பல்வேறு உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர் அருங்காட்சியமானது நடைபெற்றது. இதில் காவல்துறையினர் பயன்படுத்தும் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள், ஆயுதப்படை காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். காவல்துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகளை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியமானது சிறப்பாக அமைந்தது.




















