திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செட்டி நாயக்கன்பட்டியை அடுத்த ஆழக்குவார்பட்டியில் உள்ள குளத்தில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் திருடிய சுள்ளெரும்பு, பூலாங்குளத்தை சேர்ந்த மணிகண்டன்(45). ஆலக்குவார்பட்டியை சேர்ந்த பாலமுருகன்(40). குட்டத்துப்பட்டியை சேர்ந்த அருள்பிரகாஷ்(28). ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 டிராக்டர்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















