தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் காவலர்களுக்கான “அன்பான அணுகுமுறை” பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சியில், பொதுமக்களிடம் கனிவான, மரியாதையான மற்றும் மனிதநேயத்துடன் கூடிய அணுகுமுறையை ஏற்படுத்தும் வகையிலும், சக மனித உறவுகள் மற்றும் உணர்ச்சி மேலாண்மை குறித்தும் தஞ்சாவூர் மாவட்ட காவல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பினை திருமதி. அல்லிராணி பாலாஜி (Social Entrepreneur) மற்றும் திரு. ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.




















