இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சாதிக் அமது என்பவரை கீழக்கரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ் IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு. சிவகுரு பிரபாகரன் IAS., அவர்கள், சாதிக் அமதுவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.




















