சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை தனியார் பேருந்தில் கொண்டு வந்த நத்தத்தைச் சேர்ந்த ஹாரிஸ் (29). என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இ.கா.ப., அவர்கள் சோதனையில் ஈடுபட்ட காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசாரை பாராட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















