சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ. கா. ப., அவர்களின் உத்தரவின் பேரில், (07.11.2026) முதல் (11.11.2026) வரை மாவட்டம் முழுவதும் சிறப்பு சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட 642 நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 40 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். 2.DD பிரிவின் கீழ் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டியதற்காக 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.பொது இடங்களில் மது அருந்தியதற்காக 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளில் (NBW) 14 நிறைவேற்றப்பட்டன. மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இதுபோன்ற சிறப்பு சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




















