திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களிலும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறப்பு நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்த ரோந்து மேற்கொள்ளப்பட்டது.




















