விருதுநகர்: தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு, பத்திரப்பதிவு எழுத்தர்கள் சார்பில் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரப்பதிவுத் துறையில் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, தற்போதைய அரசு நிர்வாகத்தின் கீழ் துறையின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், தனியார் மயமாக்கல் நடைமுறைக்கு வந்தால் பத்திரப்பதிவு எழுத்தர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் சார்ந்த எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தங்களது கவலையை வெளிப்படுத்தினர். இதுதொடர்பாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரியாபட்டி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட்டு, தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எழுத்தர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















