திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நேற்று 9-ம் தேதி இன்று 10-ம் தேதி ஆகிய 2 நாட்களில் அனைத்து உட்கோட்ட DSP-கள் மேற்பார்வையில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு 22 குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட முழுவதும் 538 ரவுடிகள் போலீசாரின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வாகன சோதனையின் போது விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியதாக 343 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குடிபோதையில் ஓட்டியதாக 78 வழக்குகள் அடங்கும். மேலும் பொது இடத்தில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















