திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள பாண்டியன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் இவரது மனைவி சுவேதா. சுவேதா வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த அஜித்குமார், மனைவியிடம் இது குறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அஜித்குமார் மனைவி சுவேதாவை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















