திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் இருந்து நிலக்கோட்டை செல்லும் சாலையில் ஒட்டுபட்டியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் தகவல் அறிந்த செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகநைனார், சார்பு ஆய்வாளர் சேக அப்துல்லா மற்றும் காவலர்கள் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து படுகாயம் அடைந்தவர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















