மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறையினர் கடந்த (09.11.2026) மற்றும் (10.11.2026) ஆகிய இரு நாட்களில் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இதில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பிரச்சனைக்குரிய நபர்கள் கண்காணிக்கப்பட்டு, மொத்தம் 51 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க இதுபோன்ற தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















