திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் மற்றும் மருத்துவமனை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று போக்குவரத்து காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை செய்துள்ளனர். அதையும் மீறி இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் மற்றும் மருத்துவமனை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் செயின் லாக் (இரும்பு சங்கிலியால்) போட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















