திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தூர் மாநில சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநில அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 5.397 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இச்சோதனையில் தலைமைக்காவலர் மணிகண்டன் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.




















