சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் 36/2026-ல், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகள் 318(4), 319(2), 308 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 66(D)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் புகார்தாரரை பெங்களூரு காவல்துறை அதிகாரி எனக் கூறி தொடர்புகொண்ட மோசடி நபர்கள், அவரது ஆதார் அட்டையைத் தவறான செயல்களில் பயன்படுத்தியதாகவும், அவர் “டிஜிட்டல் கைது” செய்யப்பட்டுள்ளதாக அச்சுறுத்தி, வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கூறி ரூ.46,50,000/- பணத்தைப் பெற்றுள்ளனர்.
இந்த சைபர் மோசடியில் பயன்படுத்துவதற்காக வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து, மோசடி மூலம் பெறப்படும் பணத்தை அந்தக் கணக்குகளில் வரவு செய்து, அதற்காக கமிஷன் தொகை பெற்றதாகக் கூறப்படும் ஹிதேஷ் சஞ்ஷெட்டி (33) மற்றும் சையத் ரஹ்மான் (44). ஆகிய இருவரையும் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இருவரும் ( 10.10.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















