திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் நேற்று இரவு 6 பேர் கொண்ட கும்பல், கணவாய்பட்டியைச் சேர்ந்த லோகநாதன் (22). அன்பரசு (27). ஆகிய இருவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















