இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சடை முனியன் வலசை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று 2.9.26 மாலை 6.30 மணி அளவில் கரை ஒதுங்கியது. இதை அறிந்த கடலோர காவல் படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு உடனடியாக கீழக்கரையில் சமூகப் பணி செய்து வரும் TWIN’S ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டு உதவி கோரியதின் அடிப்படையில் TWIN’S ஆம்புலன்ஸ் அங்கு விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு அறையில் கொண்டு போய் சேர்த்தனர். இது குறித்து கீழக்கரை கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















