மதுரை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால் IPS, அவர்கள் (26.09.2026) மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து, தென் மண்டலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற நிலவரம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டம் ஒழுங்கை திறம்பட பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், தடுப்பு காவல் நடவடிக்கைகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு காவல் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















