விருதுநகர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் IPS., உத்தரவின்படியும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் IPS., வழிகாட்டுதலின்படியும், மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், குற்றச்சம்பவங்களைத் தடுப்பது மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.




















