திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டி அடுத்த கோபால்பட்டி அருகே கணவாய்ப்பட்டி பங்களா பகுதியை சேர்ந்த அன்புக்கரசன்(25). லோகநாதன்(25). ஆகிய 2 பேரை ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தது படுகாயம் அடைந்த 2 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து புறநகர் ASP.மஞ்சிமா தலைமையில் சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக தாமரைக்கண்ணன், ஐங்கரன், சுரேஷ்(எ)மைதா, அசாருதீன், கணேசமூர்த்தி, வீரமணி, சரவணன் ஆகிய 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய அமர்(எ)அஷ்ரப் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















