திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையிலான தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்தில் சந்தேகத்திற்கு இடமாக கைப்பையுடன் இறங்கிய நபரை சோதனை மேற்கொண்ட போது அதில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து போலீசார் கஞ்சா கடத்தி வந்த கிழக்கு மரியநாதபுரத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் அலெக்ஸ் ஆனந்தராஜ்(23). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















