திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த சிக்குபோல கவுண்டன்பட்டியை சேர்ந்த திருமலைசாமி மகன் பெருமாள்(60). இவரை இவரது மகன் முத்தையாவை நேற்று இரவு அடித்து கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் விசாரணையை துரிதப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து வடமதுரை போலீசார் மகன் முத்தையாவை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















