தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்துறை படைத் தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால் IPS, (DGP/HoPF) அவர்கள், 11 முன்னணி வங்கிகளின் மூத்த வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ‘காவல்துறை சம்பளத் தொகுப்பு’ தொடர்பான, விபத்து மரண வழக்குகளுக்கான தலா ரூ.1.00 கோடி மதிப்பிலான நிலுவையில் உள்ள 81 நிரந்தர விபத்து காப்பீடு (PAI) கோரிக்கைகள் மற்றும் தலா ரூ.10 லட்சம் மதிப்பிலான 250 கால ஆயுள் காப்பீடு (TLI) கோரிக்கைகள் தொடர்பான விவகாரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் வகையில், காப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து தீர்வு காண்பதற்காக இக்கூட்டம் நடத்தபட்டது.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















