திண்டுக்கல்: மதுரை உசிலம்பட்டி, கீழப்புதூரை சேர்ந்த சுமித் ராபர்ட் பால்(34). என்பவரிடம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த சங்கரமூர்த்தி(50), தேவதானபட்டியை சேர்ந்த நாகராஜ்(47). கருப்பையா(36).சுரேஷ்(38). வத்தலகுண்டு சேர்ந்த முத்துப்பாண்டி, தேனியை சேர்ந்த குப்புசாமி(40). ஜெயமங்களம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் தங்கராஜ், தென்கரை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கதிரேசன் ஆகியோர் தங்களிடம் விலை உயர்ந்த ராசியான தங்க தகடு இருப்பதாகவும் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என்று ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் ரூ.48 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக சுமித் ராபர்ட்பால் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் மேற்பார்வையில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வாணி மற்றும் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு 8 பேரையும் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















