திண்டுக்கல்: திருச்சி, திருப்பராய்த்துறையை சேர்ந்த முத்துராஜா மகன் கிருஷ்ணகுமார்(33). இவர் திண்டுக்கல் பூ மார்க்கெட் ஆரியாஸ் ஹோட்டல் அருகே தனது மனைவி கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வெனிஸ் காவலர்கள் நடராஜபெருமாள், மணிகண்டன், சிலம்பரசன் ஆகியோர் தடுக்க முயன்ற போது கிருஷ்ணகுமார் அசிங்கமாகவும் ஆபாசமாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து, காவலர் சிலம்பரசனை தான் ஓட்டி வந்த காரை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இது குறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் கிருஷ்ணகுமாரை கைது செய்து காரை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















