தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள் ஆயுதப்படையின் வாராந்திர கவாத்து பயிற்சியில் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். அதனைத் தொடர்ந்து, ஆயுதப்படை மைதானத்திற்குட்பட்ட பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரமானது காவல் கண்காணிப்பாளர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















