திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரியில் முந்தைய மாணவர்களின் சந்திப்பான அலுமினி மீட்’ கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவை செயலாளர் பிரவீன் அவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் டாக்டர். என். பாலாஜி அவர்கள் தன்னுடைய தலைமையுரையில் முன்னாள் மாணவர் சங்கத்தின் சிறப்பினையும், கல்லூரியின் வளர்ச்சியினையும் அழகாக எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர். எஸ். சௌந்தரராஜன், கல்லூரியின் வளர்ச்சி மற்றும் மைல்கற்களை விரிவாக எடுத்துரைத்தார்.
பெங்களூருவைச் சேர்ந்த ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் வடிவமைப்பாளரான திரு. ஹரிஷ் குமார, அவர்கள் விருந்தினர்களில் ஒருவராகவும் முன்னாள் மாணவராகவும் கலந்துகொண்டார். அவர் தனது உரையில், கல்லூரியில் பெற்ற அனுபவங்கள் மற்றும் தனது படிப்பு காலத்தில் கல்லூரியிது பெற்ற ஆதரவு குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அடுத்த விருந்தினராகக் கலந்துகொண்ட மற்றொரு முன்னாள் மாணவரும், சென்னை MRF லிமிடெட் நிறுவனத்தின் உதவி மேலாளருமான திரு. N. தனசேகர் அவர்கள் கல்லூரியில் தான் கழித்த மறக்க முடியாத நாட்களை நினைவுகூர்ந்தும், அவர் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு இக்கல்லூரி தனக்கு எவ்வாறு வழிகாட்டியது என்பதையும் விவரித்தார்.
மற்றொரு சிறப்பு விருந்தினரும், சென்னை lender Drives India Pvt. Ltd. நிறுவனத்தின் மேலாளரும், இக்கல்லூரியின் முன்னாள் மாணவருமான திரு. R. ராஜகோபாலன் அவர்கள், தான் கல்லூரியில் கழித்த இனிய
நாட்களைக் குறிப்பிட்டு, அந்த நாட்களை மீண்டும் பெற விரும்புவதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு கல்லூரியின் முன்னாள் மாணவியான செல்வி. கீர்த்தி பிரியா அவர்கள் பேரவையின் ஆண்டறிக்கையை வாசித்தார். அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. பின்னர், சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இணைந்து முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுமார் 200 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக பேரவையின் பொருளாளர் திரு. ஜி. டில்லிபாபு அவர்கள் நன்றியுரையாற்றினார்
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. எம்.வி. முத்துராமலிங்கம், இயக்குநர்கள் திரு. எம்.வி.எம். சசிகுமார் மற்றும் திரு. எஸ். சந்தோஷ் குமார் (வேலம்மாள் குளோபல் மருத்துவமனை, சென்னை), ஆலோசகர்கள் திரு.கே. ரசாக் மற்றும் திரு. எம். வாசு ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னாள் மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். எம். எஸ். ஹெவன் டேனி, முன்னாள் மாணவர் சங்கத்தின் (VELITAA) நிர்வாகிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. மில்டன்




















