மதுரை: உசிலம்பட்டி அருகே , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்
திறனாளிகளுக்குகாது ஓலி கருவி, கைபேசி, வீல் சேர்,வாக்கிங் கைப்பிடி,நடை பயிற்சி வண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டததில் சுமார் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்
திறனாளிகள் அலுவலர் சாமிநாதன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில் ,சேடபட்டி ஒன்றியத்தில் உள்ள 40 மாற்றுத்திறனாளி பயனாளிகளை தேர்வு செய்து காது ஓலி கருவி, கைபேசி, வீல் சேர், வாக்கிங் கைப்பிடி, நடை பயிற்சி வண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர். இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















