திண்டுக்கல்: திண்டுக்கல், குட்டியபட்டி, ட்ரீம் சிட்டி அருகே கடந்த 2021-ம் ஆண்டு பாத்தா(எ) இப்ராகிம் என்பவரை கொலை செய்த வழக்கில் யூசிபியா நகரை சேர்ந்த லத்தீப் மௌலானா(26). நத்தர்சா தெருவை சேர்ந்த சேக் அப்துல்லா(25). உள்ளிட்ட 5 பேரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசைராபர்ட் ஆகியோரின் முயற்சியால் இன்று கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள், லத்தீப்மௌலானா, சேக்அப்துல்லா ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 ஆயிரம் அபராதம் விதித்தும், 5- வது குற்றவாளி உயிரிழந்தார், மேலும் 3 மற்றும் 4-வது குற்றவாளிகளை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















