திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டில் அரசினர் நடுநிலைப்பள்ளி இயங்குகிறது தற்போது 84 மாணவ மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் சமீபத்தில் பள்ளி கோடை விடுமுறையின் போது தீ விபத்து ஏற்பட்டு கல்வி பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. இதனை அறிந்து பொன்னேரியில் இயங்கி வரும் அன்னை வசந்தம் சமூக நல கல்வியியல் அறக்கட்டளை சார்பில் நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில் ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது இதனை அந்த அறக்கட்டளையின் தலைவர் ஆனந்தி,செயலாளர் வசந்தகுமார், பொருளாளர் கஜலட்சுமி ஆகியோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் தமிழரசி,உதவி தலைமை ஆசிரியர் சுஜாதா ஆகியோரிடம் இதனை வழங்கினர். இதற்கான ஏற்பாட்டினை பஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கதிர்வேல் ஏற்பாடு செய்தார். விமல் உடன் இருந்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















