கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 80 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஒசூர் உட்கோட்ட காவல் நிலையம் வளாகங்களில் காவல்துறையினர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். ஓசூர் நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு. பிரகாஷ் அவர்கள் தலைமையிலும் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திருமதி. லதா அவர்கள் தலைமையிலும் சிப்காட் காவல் ஆய்வாளர் திரு. இளவரசன் அவர்கள் தலைமையிலும் ஓசூர் TIW காவல் நிலையத்தில் WSI. திருமதி. அமுதா அவர்கள் தலைமையிலும்
தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















