கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (12.08.2026) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்கள் முன்னிலையில், கிருஷ்ணகிரி கேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் திப்பனப்பள்ளி அரசு மாடர்ன் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் நேரில் சந்தித்து, வரவிருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் நாட்டுப்பற்று குறித்து ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். மேலும், மாணவர்கள் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக, மாணவ, மாணவியர்களின் திறமைகளை பாராட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வு மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.




















