தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நகைக்கடை பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய வழக்கில் தொடர்புடைய இருவருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் விஷ்ணு (26). மாரியப்பன் (31). ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என உறுதி செய்த JM-II நீதிமன்றம், அவர்களுக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.




















