தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் (22.07.2026) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த 54 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்ததையடுத்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதேபோன்று அனைத்து காவல் உட்கோட்ட அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.




















