திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே வேட்டையாடி மான் கொம்பு, எறும்பு திண்ணி உள்ளிட்டவை வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னிவாடி வனசரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தருமத்துப்பட்டி, D.கோம்பை பகுதியை சேர்ந்த ராமராஜன்(37). என்பவர் வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் ஏர்கன், எறும்புத்தின்னி (அலுங்கு ஓடுகள்), மான் கொம்பு, கருங்காலி மற்றும் சந்தன சிறிய கட்டைகளையும் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து வனத்துறையினர் அனைத்தையும் பறிமுதல் செய்து ராமராஜனை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















