விருதுநகர்: விருதுநகர் காரியாபட்டி உள்ள சேது பொறியியல் கல்லூரியில் ,
31 வது விளையாட்டு விழா நடைபெற்றது . நிகழ்விற்கு, கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் முகமது ஜலில் தலைமை ஏற்றார். கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன் சீனி முகமது அலி யார் மரைக்காயர், நிலோஃபர் பாத்திமா, நாசியா பாத்திமா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார் . இந்திய கடற்கரை கூடைபந்து வீராங்கனை விழாவில் கலந்து தனது சாதனைகள் குறித்து பேசினார்.
காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி 31வது விளையாட்டு விழாவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு மதுரை காவல்துறைத் தலைவர்
விஜேந்திரா பிடாரி பரிசுகள் வழங்கினார். விழாவில் , உடற்கல்விஇயக்குநர் சிவ. விக்னேஷ் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















